நாடு முழுவதும் 650 அஞ்சலகங்களில் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கிச் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் வரை இருப்புத்தொகை சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு தொடங்கலாம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப் பெறுவதற்கான சேவைகள், காப்பீடு, பரஸ்பர நிதிகள், ஓய்வூதியம், மின் கட்டணம், வீட்டுவரி, மொபைல் ரீ-சார்ஜ், டிடீஎச் ரீசார்ஜ், குடிநீர் வரி இது போன்ற மாநில, இந்திய, மற்றும் சர்வதேசப் பண பரிவர்த்தனை வசதிகளை அஞ்சலக வங்கி வழங்கவுள்ளது.
இதில் கணக்கு ஆதார் எண் கொண்டு 10 நிமிடங்களில் அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கியவுடன் அஞ்சலகங்களில் எளிதில் பணம் பெறும் வகையில் கியூஆர் கோடு வழங்கப்பட உள்ளது. கிராமப்புற மக்களும் வங்கி சேவை பெறும் நோக்கில், நாடு முழுவதும் சுமார் 650 தபால் அலுவலங்களில் இந்த புதிய வங்கி திட்டம் செயல்பட உள்ளது.
மேலும் இந்த வங்கியில், முதியோர் உதவித்தொகை, சமையல் எரிவாயு மானியத்தொகை, மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தொகை தபால் வங்கி மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் புதிய கணக்கு துவங்க கைபேசி எண், ஆதார் கார்டு எண் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முழுவதும் செயல்படும் இத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (செப்.1) வீடியோ கான்பரசிங் மூலம் துவங்கி வைத்தார். இதையடுத்து இராமநாதபுரத்தில் இந்த வங்கி துவக்க விழா ஏவிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி கிளை மேலாளர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பேசியதாவது. அஞ்சல் துறை சேவை அளப்பரியது. இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி சேவையை பொதுமக்கள் சேர்ந்து பயனடைய வேண்டும். வங்கியை மக்கள் தேடி சென்ற காலம் போய் மக்களை தேடி வரும் காலம் வந்துள்ளது. 3 ஆயிரம வாடிக்கையாளர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கப்பட்பது. அஞ்சல் துறையில் இது ஒரு மைல்கல். சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றார். பிரதமர் மோடி நிகழ்ச்சி நேரலை நிறைவடைந்ததும் இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி திறப்பு சிறப்பு தபால் தலை உறையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்டார். வங்கி கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு கியு ஆர் அட்டையை ராஜா குமரன் சேதுபதி வழங்கினார். இராமநாதபுரம், உச்சிப்புளி, மான்குண்டு, இரட்டை யூரணி, நாகாச்சி ஆகிய இடங்களில் இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி திறப்பு விழா நடந்தது.
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வீரபுத்திரன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா S பாண்டியன், அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் விஜய கோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா N பஞ்சம் பட்டியில், வங்கி சேவை மையம்,திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்தவர்கள், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி,BA,,.BGL,. பஞ்சம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சாகிராபானு, பாதிரியார் ஜேசுராஜ், தலைமை ஆசிரியர் செல்வராயர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ரவி செல்வம், துணை அஞ்சல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன்,துணை அஞ்சல் கண்காணிப்பாளர் லியோ ஜேசுராஜன், ஏரியா மேனேஜர் பஞ்சம் பட்டி (அஞ்சல்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













