பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசியபேரியக்கத்தின் சார்பாக நடைபெற்ற தெரு முனை பிராச்சாரக் கூட்டம்:-

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரியக்கத்தின் சார்பாக இந்தியா முழுவதும் “அச்சமற்ற வாழ்வே..! கண்ணியமான வாழ்வு” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது.அதன் ஒரு பகுதியாக இராமநாதப்புரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும், பனைக்குளத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் நடைபெற்றது.தேவிபட்டினத்தில் நடைப்பெற்றநிகழ்ச்சியில் சகோதரர் தமீம் தலைமை தாங்கினார் முஹம்மது ஹனிப் வரவேற்புரையாற்றினார், மாவட்ட பேச்சாளர் ஹாலித் சிறப்புரை ஆற்றினார் ரசீது நன்றியுரை வழங்கினார்பனைக்குளத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுராகிம் தலைமை தாங்கினார்.SDPI நகர தலைவர் சேக் அலாவுதீன், மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் புதுவலசை ஏரியா தலைவர் ரிஸ்வான் முன்னிலை வகித்தனர் நகர தலைவர் முஹம்மது ரியாஸ்தீன் வரவேற்புரையாற்றினார்..மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது இப்ராஹிம் சிறப்புரையாற்றினர். அவர் கூறுகையில் அநியாய ஆட்சியை எதிர்த்துப் போராடவேண்டும், மனித உயிர்களை மாட்டின் பெயரால், ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கொலை செய்யும் கும்பல்களை சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும், கொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அன்சாரி, ஹாலித் அன்சாரி மற்றும் பலரது குடும்பத்திற்கு நீதி வேண்டும், நிவாரணம் வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியை #ஜாகிர் தொகுத்துவழங்கினார், இறுதியாக தாஹா நன்றியுரை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நுறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!