கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு! பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்லக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். மேலும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ” இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தவர் போப் பிரான்சிஸ். ஏழை, எளிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது அன்பு காட்டி அரவணைத்தவர். அவரது மறைவால் மிகுந்த வருத்தமடைந்தேன்” என்று கூறப்பட்டுள்ளது.

 

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!