சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் அளவில் ரோடு மிகவும் மோசமாக இருந்து குண்டு குளியுமாக இருந்தது இதனால் பல விபத்துகள் நடந்து வந்தது. இது குறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி இந்த ரோடு புதுப்பித்து கொடுப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்தார். இதன் பேரில் அந்த ரோட்டை புதிதாக போடுவதற்கு 2 கோடியே20 லட்சம் செலவில் போடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க வேலை ஆரம்பிப்பதற்கு பூமி பூஜை நடந்தது. சோழவந்தான் சட்டமன்றஉறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய அணி மாவட்டஅமைப்பாளர் வக்கீல்முருகன், நிர்வாகிகள் சிபிஆர் சரவணன், வீரபாண்டி, திருமுருகன், காமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி எஸ் எம் பாண்டியன் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர் கௌதமன், ரோடுஇன்ஸ்பெக்டர் பாண்டிகார்த்தி, சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், பிற்பட்டோர்நல வாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி ஒன்றிய நிர்வாகி கேபிள்ராஜா நீலமேகம் பெரிய கருப்பன் செங்குட்டுவன் பால் கண்ணன் நாகேந்திரன் குருசாமிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.