கீழக்கரை பள்ளியில் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனபோகார சங்கம் சார்பில் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோரை போற்றி வணங்கும் விழா பொதுச் செயலாளர் நாகு என்ற நாகராஜன் தலைமையில் பள்ளியின் தாளாளர் கார்த்திக் மற்றும் கல்வி கமிட்டி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பிள்ளையின் மீது வைத்திருக்கும் அன்பையும் பிள்ளைகள் பெற்றோர்களின் அன்பை உணர்ந்து அவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு பாதை பூஜை செய்து பொட்டு வைத்து அவர்களை வணங்கி வழிபட்டு இருவரும் இனிப்புகள் ஊட்டி மகிழ்ந்தனர். அதேபோன்று பிள்ளைகளின் படிப்பிலும் இவ்வுலகிலும் நட்மதிப்பு பெற வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசீர்வதித்தனர். மேலும் பிள்ளைகள் பெற்றோர்கள் முன் கைபேசி பயன்படுத்த மாட்டேன் என்றும் தீய சொற்களை பேச மாட்டேன் என்று சபதம் எடுத்தனர் .அதே போன்று பிள்ளைகள் சிறப்பாக வளர்வதற்கும் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதற்கும் பெற்றோர்கள் முழு முயற்சி எடுப்பதாக சபதம் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி பிள்ளைகள் பெற்றோர்களை வணங்குவதும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வதிப்பதும் போன்ற நிகழ்ச்சியை ஆச்சிரியத்தோடு கண்டுகளித்தனர். மேலும் கீழக்கரையில் எந்த பள்ளியிலும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் உறவை எடுத்துக் கூறும் வகையில் இது போன்ற சிறப்பான நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றும் வருங்காலங்களில் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் முறையை தடுக்கும் என்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் வரக்கூடிய தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி பெற்றோர்களும் பிள்ளைகளும் கூட்டுப் பிராத்தனை செய்தனர். இந் நிகழ்ச்சியில் 2 வது வார்டு கவன்சிலர் ஜெயலெட்சுமி , முதுகலை ஆசிரியர் எஸ்தர் செந்தில்குமார், பேராசிரியை விசாலாட்சி அன்பு கருப்பையா ,லயன்ஸ் கிளப் பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் நன்றி உரை வழங்கினார். சுந்தரபாண்டி , அழகர்சாமி ,காசிநாதன் ஆகியோர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!