பொங்கல் போனஸ் வருமா வராதா.? காத்துக் கிடக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்! கவனிக்குமா அரசு..?

S.செந்தில்குமார், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர் அறிக்கை :

தமிழக அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.

பொங்கல் போனஸ் தங்களுக்கும் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக அரசு பொங்கல் போனஸ் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலி, பகுதிநேர பணியாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.

ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

12 ஆண்டாக பணிபுரிகின்றவர்களுக்கு போனஸ் வழங்காமல் மறுத்துவருவது இந்த பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே நடக்கிறது.

அப்படி இருந்தும் ஒரு கோரிக்கை தொடர்ந்து எழும்போது நியாயமாக போனஸ் வழங்கவேண்டும் என்பதுதான் சரியான தீர்வு.

இது சம்பந்தமாக பள்ளிக்கல்வி அமைச்சர் இந்த கோரிக்கை குறித்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என உறுதிஅளித்து உடனே அறிவிக்கவேண்டும்.

மேலும், ₹2500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் 4-10-2023 அன்று வெளியிட்ட அறிவிப்பையும் உடனே செயல்படுத்த வேண்டும்.

அதுபோல் தமிழக முதல்வர் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி கருணையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

முதல்வர், தலைமைச் செயலாளருக்கும் கோரிக்கை அனுப்பி உள்ளோம்.

பொங்கல் போனஸ், சம்பள உயர்வு, பணிநிரந்தரம் கோரிக்கைக்கு நல்ல செய்தி வரும் என காத்துள்ளோம்.

S.செந்தில்குமார் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செல் : 9487257203

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!