பொங்கல் இனாம் இன்று (07/01/2019) வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் கால தாமதப் படுத்துவதால் பொதுமக்கள் ஏமாற்றம்.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 மற்றும் பச்சரிசி சர்க்கரை முந்திரி திராட்சை ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்புடன் 7.01. 2019 முதல் விநியோகம் செய்ய படுவதாக அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் நகரில் ஒருசில பகுதிகளில் இன்னும் பொங்கல் இனாம் பொருட்கள் வரவில்லை என்று ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது அதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து மூடியிருக்கும் கடையை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்கிறார்கள் சில கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நாளை 8.01.2019 பொங்கல் இனாம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்


You must be logged in to post a comment.