பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? என சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது. எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் ரூ 2100 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ, 1000 வழங்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.