பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் ரயில்வே துறை அறிவிப்பு..
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி வரும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமையில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மறுமார்க்கமாக திங்கள் மற்றும் புதன் அன்று தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
அதன்படி, ஜனவரி 14,16 ஆம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். ஜனவரி 15,17 ஆம் தேதிகளில் காலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்நிலையில் பொங்கலையொட்டி கோவையில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.16,17 ஆம் தேதிகளில் இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜன.17,18 ஆம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலில் 12 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், 2 படுக்கை வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இடம்பெற்றியிருக்கும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









