விழிம்பு நிலை நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் நரிக்குறவர் காலனியில் கோலப்போட்டியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை.
தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்களை களை போல் விழிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களும் பொங்கல் கொண்டாட தஞ்சை ஜோதி அறக்கட்டளை ஏற்பாடில் கோலப்போட்டி நடைபெற்றது 30 பேர் கோலப்போட்டியில் பங்கேற்று வண்ணக்கோலமிட்டு அசத்தினர்.
தொடர்ந்து சர்க்கரை பொங்கல் வைத்து ஆடிப்பாடி சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
கோலப்போட்டியில் பங்கேற்ற 30 பேருக்கும் புடவை பரிசளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி செய்திருந்தார்.
You must be logged in to post a comment.