இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்
அலங்கரித்து வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சரண்யா தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழர் கலாச்சார போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு மாணவர்கள் ருசித்து உண்டு மகிழ்ந்தனர்.இறுதியில் பள்ளி ஆசிரியை சீதா லட்சுமி நன்றி உரை ஆற்றினார்.








You must be logged in to post a comment.