இராமநாதபுத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குனர்கள், கோபிநாத், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அலுவலகத்தின் முன்பகுதியில் தமிழர் திருநாளாம் தைபெங்கல் திருநாளை முன்னிட்டு செங்கரும்புகள் கட்டி வைத்து சமத்துவ பொங்கலிட்டு பால் பொங்கியது போல் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என கூறி ஒருவருக்கு ஒருவர் தங்களின் வாழ்த்துக்களை கூறிக் கொண்டு சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடினர். அதன் தொடர்ச்சியாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உறி அடித்தல், டேபில் ஸ்பூன், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆய்வாளர்கள், சரவணன், அபுதாஹிர், சார்பு ஆய்வளர்கள் மற்றும் சாகர் மித்ரா அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.