திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கோவில்பட்டி என்ற பசுமையான கிராமத்தில் வெற்றி வேலப்பர் கோவிலில் சுற்றுலாத்துறை சார்பாக வெளிநாட்டினர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக பூம்பாறை வடிவேல் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டத்தின் மூலம் கட்டக்கால், வாள்கேடயம், மான்கொம்பு சுருள்வாள் கத்தி, நட்சத்திரசுற்று, பிச்சுவாள், கத்திபோன்ற பல வீர தீர சாகசங்களை செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஜான் மற்றும் ரோஸ் பறை இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர் பின்பு தமிழக கலாச்சாரப் படி பொங்கல் வைத்து தமிழ் கடவுள் முருகனுக்கு படைத்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை சுற்றுலாத்துறை அலுவலர் உமாதேவி, உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் செய்திருந்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஸ்ரீதர், துணைத்தலைவர் ஜாபர் சாதிக், நகர அவைத்தலைவர் ஜான் தாமஸ், அழகு வினோத், பிச்சை, செல்வம்,சம்சுதீன், மற்றும் கோடை ஸ்மைல் அசோசியேசன் தலைவர் அப்பாஸ், ரவிச்சந்திரன், ராஜசேகர், நடராஜன் மற்றும் கோவில் கமிட்டியாளர்கள், தலைவர் SPS மயில் செயலாளர் R நாட்ராயன் பொருளாளர்கள் காமராஜ், லட்சுமணன், பட்டக்காரர் ரத்னசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கீழைநியூஸ் செய்திகளுக்காக கொடைக்கானல் செய்தியாளர் கோடை ரஜினி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









