பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி காவலர் குடியிருப்பு காவலர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் இருபதாம் ஆண்டு விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சிகள் இரண்டு நாள்களாக நடைபெற்றது.
இதில் மியூசிக் சேர் ,கயிறு இழுத்தல், ஓட்டபந்தயம் மற்றும் பலவகையான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் காவல்துறையினர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி



You must be logged in to post a comment.