செங்கம் அரசு அலுவலர்கள் சமத்துவப் பொங்கல் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, கரும்புகள், வாழைக்கன்றுகள் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்து வந்து பெண் அலுவலர்கள் குலவையிட்டபடி, பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொண்டு பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி பழங்கள், பொங்கல், பனங்கிழங்கு, கரும்பு உள்ளிட்டவற்றை படைத்து தீபாரதனை காட்டி அனைவரும் வழிபட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு செங்கம் வட்டாட்சியர் முருகன் தலைமையில் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் துணை தாசில்தார் திருநாவுக்கரசு முன்னிலையில் பொங்கல் விழா மிக விமர்சையாக ஆடல் பாடலுடன் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டாடப்பட்டது. ஏராளமான அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி பொங்கல், கரும்பை பரிமாறிக்கொண்டு, உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
You must be logged in to post a comment.