பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக தமிழர்கள் தைத்திருநாளாம் பொங்கல் விழாவை பாரத் கல்லூரி வளாகத்தில், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டு துறையும், பாரத் மகளிர் மன்றம் மற்றும் உள்தர உறுதி கட்டுப்பாட்டு துறை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டா டினர்.
பாரத் கல்லூரியின் இப் பொங்கல் விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பர உடையான சேலை, தாவணி .வேஷ்டி, சட்டை ஆகிய உடைகளை அணிந்து மேலும் பொங்கலை மண் அடுப்பு, மண்பானை, கரும்பு இவைகளை வைத்து பொங்கல் பொங்கி விழாவை கொண்டாடினர்.இவ் விழாவினை பாரத் கல்வி குழுமத்தின் செயலர் திருமதி புனிதா கணேசன் அவர்கள் மண்பானை வைத்து தீ மூட்டி விழாவை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.உடன் பாரத் கல்வி குழுமத்தின் இயக்குனர் முதல்வர்கள், ஆசிரியர் பெருமக்கள் ,மாணவ , மாணவிகள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவில் நமது பாரம்பரியமான கும்மி பாட்டு, சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டன .இந்த நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் முனைவர். த.வீராசாமி. முதல்வர் முனைவர் க. குமார், முதல்வர் சி.முத்துக்கிருஷ்ணன், கல்லூரி உள்தர உறுதி பிரிவின் இயக்குநர் மா. சுகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் இரா. அறவாழி, துணை முதல்வர்கள் . இராஜராஜேஸ்வரி .ப.கவிதா பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..
You must be logged in to post a comment.