மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பனம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊர் நலன் கருதியும் கிராம மக்கள் நோயின்றி வாழவும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாமல் இருக்க நான்கு திசையில் உள்ள நான்கு தெரு முனைகளிலும் வேப்ப மரத்தை நட்டு வைத்து அதை தெய்வமாக வழிபட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.இதன்படி கிராம மக்கள் ஒன்றிணைந்து நான்கு திசையிலுள்ள தெரு முனைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.