திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் வட்டம் அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தலைமை ஆசிரியர் முனைவர் மு. பிரசன்னா தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி அனைவரும் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் லோகநாதன் கலந்து கொண்டனர். விழாவில் நாட்டு நலப்பணி இளம் சிறார் செஞ்சிலுவை சங்கம் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மாவிலை தோரணம் கட்டி புது பானையில் பொங்கலிட்டு கரும்பு வைத்து பூஜை செய்து பொங்கலோ பொங்கல் என முழங்கி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கலை உண்டு மகிழ்ந்தனர். ஆசிரியர்கள் லோகநாதன் மற்றும் சத்திய பாரதி ஆகியோர் ஒருங்கிணைந்து விழாவை நடத்தினர். இறுதியாக உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜி நன்றி உரை ஆற்றினார்.

You must be logged in to post a comment.