முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் NSS சிறப்பு முகாம்…

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் 11/03/2019 முதல் 17/03/2019 புதுமாயாகுளம் மற்றும் பாரதிநகர் கிராமங்களில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் துவக்க விழா கல்லூரி முதல்வர் அ.அலாவுதீன் தலைமையில் 11/03/2019 அன்று தொடங்கியது.  திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா சிறப்பு முகாமிற்கு வந்து விருந்தினர்களை வரவேற்று பேசினார். முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் டாக்டர் முஹம்மது ஜஹபர், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்பாஸ் முகைதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ரஜபுதீன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் சுந்தரம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர்கள் வாழ்ந்திருந்தார் வழங்கினார்கள்.

இந்த சிறப்பு முகாமில் முதலுதவி பயிற்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு பயிற்சி, பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம், உழவன் செயலி விளக்கம் ஆகிய முக்கிய நிகழ்வுகளும் மற்றும் களப்பணிகளான தூய்மைப்பணி, வாக்காளர் விழிப்புணர்வு, சீமைக்கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், சுகாதார விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சி மற்றும் கடற்கரை தூய்மைப்பணி ஆகியன நடைபெற உள்ளது.  திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!