திருவண்ணாமலை அடுத்த போளூர் சாரண மாவட்டம் பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட செயலர் ரமேஷ் ஆலோசனையின் படி செழியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணிய மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மாணவர்களுக்கு சாரண இயக்கத்தின் வரலாறு இறைவணக்க பாடல் கொடி பாடல் முதலுதவி கயிற்று கலை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த செழியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மற்றும் சாரண ஆசிரியர் ஜெயக்குமார் சாரணர் இயக்கத்தில் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது பயிற்சி போளூர் சாரண மாவட்டத்தைச் சேர்ந்த சாரண சாரணிய பொறுப்பாளர்கள் பயிற்சி அளித்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.