இராமநாதபுரம், ஜன.12- முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலரும், ராஜ்ய சபா எம்பியுமான தர்மர் பேசியதாவது: ராமநாதபுரத்தில் ஜன.20ல் நடைபெற உள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் உரையாற்ற வருகை தரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பார்த்திபனூர், சத்திரக்குடி, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பளிக்கப்படும். அவர் இங்கு வந்து பேசிவிட்டு திரும்பும்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர். அவரை தவிர வேறு யாரும் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றார். மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், துணை செயலாளர் நவநாதன், மாவட்ட கவுன்சிலர் கற்பகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் மூக்கையா, ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலர் முத்து முருகன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலர் சீனிமாரி, ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












