முதல்வர் இபிஎஸ்., முன்னிலையில் அதிமுக., வில் மீண்டும் ஐக்கியமான இராமநாதபுரம் அமமுக., மகளிரணி மாநில இணை செயலர்..

இராமநாதபுரம் மாவட்ட அதிமுக., மகளிரணி மாவட்ட செயலராக இருந்தவர் கவிதா சசிகுமார். 2011 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் வென்ற இவர், துணை சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். நகராட்சி தலைவராக இருந்த எஸ்.கே.ஜி., சேகர் மறைவுக்கு பின்னர், நகராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார்.

இதன் பின், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில் அங்கம் வகித்த கவிதா சசிகுமாருக்கு அமமுக., மகளிரணி மாநில இணை செயலர் பதவி வழங்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக., வில் மீண்டும் இணைய விரும்பினார். இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டன் ஆலோசனைப்படி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் கவிதா சசிகுமார் தன்னை அதிமுக., வில் மீண்டும் இணைத்துக் கொண்டார். அமைச்சர் மணிகண்டன், கவிதாவின் கணவரும் அமைச்சரின் அண்ணனுமான சசிகுமார், கடலாடி அதிமுக., ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!