இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மகனுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர்…


இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் இன்று (10.3.19) துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மகன் வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் தா.மகேஸ்வரி வி.எபினேசர் செல்லத்துரை, சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.முத்துகிருஷ்ணன், ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஹரிதாஸ், கலந்து கொண்டனர்.


இராமநாதபுரம் மாவட்டத்தில1,21,398 குழந்தைகளுக்கு 1229 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணியில் 27 சிறப்பு மருத்துவ குழுக்கள், 33 நடமாடும் குழுக்கள் உள்ள 4,912 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!