பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் வேல்ராஜ் மீது புழல் காவல்நிலையத்தில் புகார்!

 பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் வேல்ராஜ் மீது புழல் காவல்நிலையத்தில் புகார்!

டெல்லிக்கு சென்று வந்தவர்களால்தான் கொரோனா பரவியது என்று தவறான தகவலை பரப்பியதாகவும், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை இழிவு படுத்தும் விதமாக முகநூலில் பதிவிட்டதாகவும், பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் வேல்ராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறித்தி இன்று 23.04.2020 காலை 11 மணியளவில் திருவள்ளுர் (கிழக்கு) மாவட்டம் மாதவரம் பகுதியில் உள்ள புழல் காவல்நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் புழல் ஷேக்முஹம்மதுஅலி , மாவட்ட செயலாளர் அப்துல் காதர் , மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது ரசாக் ஆகியோர் புகார் மனுவை வழங்கினார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!