வீர தீர நற்செயலுக்காக உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு காவலரை கௌரவித்த சென்னை ஆணையர்…

செம்பியம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு முதல் நிலைக் காவலராக பணிபுரிபவர் டி.சிவலிங்கம். அவர் இன்று (24.06.2018) காலை 7.30 மணியளவில் செம்பியம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அப்பகுதியில் சில நபர்கள்  இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்ததை கண்டுள்ளார்.
அச்சமூகவிரோதிகளை பிடிக்கும் வண்ணம்   தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று எம்.எச்.சாலை மற்றும் ராகவன் தெரு சந்திப்பில் பிடிக்க முயன்ற போது, காவலர் டி.சிவலிங்கத்தை அச்சமூகவிரோதிகள் கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்றனர். ஆனால் காவலர் சிவலிங்கம் தனது காயத்தை பொருட்ப்படுத்தாமல்  குற்றவாளிகளை மடக்கிப்பிடித்தார். இச்சம்பவத்தில்  1.ராமமூர்த்தி (எ) அஜித், வ/19, 2.பரத்ராஜ், வ/21, ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
அச்சம்பவத்தில் துணிச்சலாகவும், விவேகமாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த முதல் நிலைக்காவலர் டி.சிவலிங்கத்தை இன்று (24.6.2018) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன்  நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!