இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர சோதனை !தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் . !!

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் சார்பில் 56 பள்ளிகள் மற்றும் கல்லூரி பகுதிகளிலும், 149 பொது இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உணவுப் பாதுகாப்புதுறையினருடன் சேர்ந்து 12 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள இடங்களிலும், 22 பொது இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்த 8 நபர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8.061 கி.கி. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 கடைகளுக்கு மொத்தம் ரூ.1,75,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கும், நிரந்தரமாக மூடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230759 / ஹலோ போலீஸ் 8300031100 / மாவட்ட தனிப்பிரிவு 04567-290113 / 9498101615 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படுபவர்கள் பற்றிய இரகசியம் பாதுகாக்கப்படுமெனவும், மேற்படி தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், IPS., எச்சரித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!