போலீஸ் வேலைக்கு செப். 3 முதல் இராமநாதபுரத்தில் உடற்தகுதி தேர்வு..

போலீஸ் வேலை எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு செப்., 3 முதல் 4 நாட்கள் ராமநாதபுரத்தில் உடற்தகுதி காண் தேர்வு நடைபெறவுள்ளது.

போலீஸ் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை போலீசார், தீயணைப்பு, இரண்டாம் நிலை சிறைத்துறை போலீசார் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் 11ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரம் பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கு உடற்தகுதி காண் தேர்வு செப்.,3ம் தேதி முதல் செப்., 6 ம் தேதி வரை 4 நாட்கள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள் வேலைக்கு விண்ணப்பித்தபோது தெரிவிக்கப்பட்ட இணையதள முகவரியில் சென்று விவரங்களை பெறலாம். உடற்தகுதி காண் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், பணி நியமனம் செய்யப்படுவர் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

—————————————————————-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!