கேரள மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை புளியரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 496 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி என்பவரின் மகன் மாதவன்(32) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 496 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று, தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய சரகத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆழ்வார் குறிச்சி ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சக்தி வடிவேல் (29) மீது காவல் ஆய்வாளர் காளீஸ்வரி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.