கீழக்கரையில் கட்டிட வேலை, கூலி வேலை, பொருள் விற்பனை என பல்வேறான வேலைகளுக்கு வட மாநிலத்தவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களால் பல குற்றச் செயல்கள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் கீழக்கரை வெங்கடேஷ்வரா மஹாலுக்கு 08/09/2018 மாலை 05.00 மணிக்கு காவல்துறையினரால் வடமாநில பணியாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. கீழக்கரை காவல் ஆய்வாளர் திருமதி முத்து மீனாட்சி தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் செந்தில் முருகன், முனீஸ்வரன், மற்றும் காவலர் சந்திர சேகர் ஆகியோர் வடநாட்டவர்களிடம் 2 போட்டோ, ஆதார் நகல் மனுவில் கையெப்பம், போன்றவற்றை பெற்று கொண்டனர். மேலும் அவர்களிடம் வேலைக்கு வைத்திருப்பவர்களின் அனுமதியின்றி எங்கும் எங்கும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல்: மக்கள் டீம்




You must be logged in to post a comment.