ஊர்க்காவல் படையினர் காவல்துறையின் ஒர் அங்கம், ஆகவே பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் வாங்க வேண்டும்” என ஊர்காவல் படையினருக்கான பயிற்சி பயிற்சி நிறைவு விழாவில் S.P. முரளி ரம்பா உரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கவாத்து மைதானத்தில் இன்று (31. 01 2019) 81 ஊர்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு முடிவுற்று அணிவகுப்பு நடைபெற்றது. ஊர்க்காவல்படை வீரர் தெய்வ பிள்ளை தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஏற்றுக்கொண்டார்
பின் மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியதாவது ” ஊர்க்காவல் படையினர் காவல்துறையின் ஒர் அங்கம், ஆகவே எப்போதும் பணிபுரிவதற்கு தயாராக இருக்க வேண்டும், பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் வாங்க வேண்டும்” என்றார்
இந்த பயிற்சியானது கடந்த 01 .12 .2018 .அன்று தொடங்கி நேற்றுடன் ( 30. 01. 2019) முடிவுற்றது. பயிற்சி பெற்ற இந்த ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ,கோவில் பாதுகாப்பு, மற்றும் இதர பணிகளுக்கு காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள்
இப்பயிற்சியானது ஊர்க்காவல் படையின் வட்டார தளபதி பாலமுருகன், துனை வட்டார தளபதி கௌசல்யா, உதவி ஆய்வாளர் வேலப்பன்,ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது தலைமை காவலர்கள் ஐயப்பன், சுரேஷ் ,வைகுண்டராமன், ஆகியோர் கவாத்து பயிற்சி அளித்தனர்
இவ்விழாவில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன் ராமு ,பயிற்சி உதவி கண்காணிப்பாளர் ஜான் ஆல்பர்ட், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்யநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்
நிருபர் : அஹமத்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














