டிடிவி தினகரன் மீது நடவடிக்கை கோரி தென்னாடு மக்கள் கட்சி போலீசில் புகார்….

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அக். 28, 29, 30 இல் தேவர் ஜெயந்தி, குருபூஜை நடைபெற்றது. இந்த விழாவில் அக்., 30இல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பிஎஸ், தென்னாடு மக்கள் கட்சி தலைவர் கணேசத்தேவரை வரவேற்று விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டது.

இதனை குருபூஜையில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலர் டி.டி.விதினகரன் தூண்டுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது, தேவர் குருபூஜை விழாவை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அமமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்னாடு மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் கணேசத்தேவர், மாநில தலைவர் கே.ஆர்.செந்தில் வாண்டையார், மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமலிங்கம், இளைஞர் அணி தலைவர் சரவணன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முத்துமாணிக்கம், சிவகங்கை மாவட்ட செயலாளர் சண்முகநாதன், மதுரை மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கபாண்டியன், மாவட்ட தலைவர் சரவணன்,வழக்கறிஞர் விக்னேஸ்வரன் ஆகியோர் கமுதி போலீசில் புகார் கொடுத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!