உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் ராஜா உத்தரவின்பேரில் காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் முககவசம் அணிந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்;டது. பொதுமக்களும் கபசுர குடிநீரை சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கிசென்றனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகஓட்டிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ், மற்றும் சார்பு ஆய்வாளர் சேகர், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!