அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.43 லட்சம் மதிப்புள்ள 343 கிலோ புகையிலைப் பொருட்கள் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், 05.01.2026 அன்று குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இலஞ்சி பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

 

இதில், இலஞ்சி ராமசாமி பிள்ளை தெருவை சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் ரவி @ ரவி ராஜ பாண்டியன் (வயது 45) என்பவர் பதுக்கி வைத்திருந்த 343 கிலோ எடை கொண்ட ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ரவியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளனர்.

 

மேலும் புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!