தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 22.09.25 அன்று இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி விபத்து ஏற்படுத்தியதில் விபத்தில் காயம் அடைந்த நபர் மரணம் அடைந்தார்.
இது குறித்து தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டதில் இரு சக்கர வாகனம் மூலம் விபத்து ஏற்படுத்தியது தென்காசியை சேர்ந்த 16 வயது இளஞ்சிறார் என்பது தெரிய வந்தது. எனவே மேற்படி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளஞ்சிறார் மற்றும் இளஞ்சிறாருக்கு வாகனம் கொடுத்த வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.