நேர்மை மிகுந்த சிறுவர்களை பாராட்டி காவல் ஆய்வாளர் சுரேஷ் பரிசு வழங்கினார். கடையம் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவர்களான தர்மர் என்பவரின் மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி என்பவரின் மகன் பாலாஜி ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே கிடந்த 100 ரூபாயை எடுத்து அதனை உடனடியாக கடையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர்.

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் சிறு வயதிலேயே நேர்மையாக செயல்பட்டு காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் இருவருக்கும் தலா 100 ரூபாயை காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் பரிசாக வழங்கி, இதேபோல் எப்போதும் நேர்மையாக இருந்து உங்களின் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்து வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.