உசிலம்பட்டியில் சம்பளப்பிரச்சனையில் இளைஞர் மீது தாக்குதல்.புகாரளித்தும் வாங்க மறுத்து போலிசார் அலைக்கழிப்பதாக இளைஞர் புகார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழமாதரையைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் பழனியாண்டவர் 28.இவர் உசிலம்பட்டி எஸ்ஒஆர் நகரிலுள்ள கோபி என்பவரின் பேக்கரியில் தினக்கூலியாக ரூ.400 சம்பளத்திற்கு டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் இம்மாதம் ரூ.100 சம்பளம் உயர்த்திக் கேட்டதாகக் கூறப்படுகின்றது.இது தொ

Oplus_0

டர்பாக கோபி மற்றும் மற்ற பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டு தகராறு ஆன நிலையில் பழனி வேலையை விட்டு நின்று விட்டதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் கோபி மற்றும் கடையில் பணியாற்றும் சிலருடன் சேர்ந்து ஆம்னி காரில் பழனியை ஏமாற்றி ஏற்றிச் சென்று உசிலம்பட்டி அருகே சின்னசெம்மேட்டுப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வைத்து ஜாதியை சொல்லி திட்டி தாக்கியுள்ளனர்.பழனி அலறல் சத்தம் கேட்டு தோட்டத்து உரிமையாளர் வரவே அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள சீமானுத்து ஓடைப்பகுதிக்கு சென்று பழனியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து தாக்கியதாக கூறப்படுகின்றது.பின்னர் உசிலம்பட்டியில் வந்து இறக்கி விட்டு விட்டு நீ உசிலம்பட்டியிலே இருக்க கூடாது.மீறி இருந்தால் குமரவேல் எஸ்ஜயிடம் சொல்லி கஞ்சா வழக்கில் உள்ளே போடுவோம்; என மிரட்டியதாகக் கூறப்படுகின்றது.இதுகுறித்து பழனி தனது தந்தை செல்லப்பாண்டி உடன் உசிலம்பட்டி நகர்; காவல் நிலையத்தில் புகாரளிக்க புகாரை வாங்க மறுத்த போலிசார் தாலுகா காவல்நிலையம் செல்லுமாறு கூற அங்கு சென்றால் மீண்டும் நகர் காவல் நிலையம் செல்லுமாறு கூறியுள்ளனர். கோபி என்பவரின் பேக்கரியில் தான் பணிபுரியும் போது நகர் காவல் நிலைய போலிசார்; ஓசியில் டீ சாப்பிடுவர்கள் என்றும் அதனால் கோபிக்கு ஆதரவாக புகாரை வாங்க மறுத்து அலைக்கழிப்பதாக பழனி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக மதுரை எஸ்பி தனிப்பிரிவு- மதுரை ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி ஆர்டிஓ ஆகியோருக்கு பதிவுத் தபாலில் புகார் அனுப்பியுள்ளார். இது பற்றி தனியார் பேக்கரி உரிமையாளர் கோபியிடம் கேட்ட பொழுது கடையில் பணியாற்றியவர்களிடம் பழனி போதையில் தகராறில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் புகாரில் கூறியுள்ள மற்ற அனைத்தும் பொய்யான தகவல் என கூறினார். ஓசி டீக்காக போலிசார் இளைஞரின் புகாரை வாங்க மறுத்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!