
சொகுசு காரில் தொடர்ந்து ஆடு திருடிய கும்பல்: காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி..!
சொகுசு காரில் வந்து போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கிராமம் கிராமமாக சென்று ஆடு திருடும் இரண்டு ஆசாமிகளை, சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து கார் மற்றும் ஆடுகளுடன் ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததை தொடர்ந்து, மாவட்ட எஸ்பி சந்தீஷ் கார்களில் வந்து ஆடுகள் திருடிச் செல்லும் கும்பலை பிடிக்க கேணிக்கரை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் இருந்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, ஒரு கும்பல் கார் மூலம் ஆடுகளை திருடி செல்வதாக தெரிய வந்ததை தொடர்ந்து, காரைக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், அராபத் ஆகியோர் காரில் ஆடுகளை திருடி சென்ற போது மடக்கி கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து அப்போது காரில் இருந்த எட்டு ஆடுகள், திருடிய ஆடுகளை விற்பனை செய்த ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் திருடி செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார், போலி நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
You must be logged in to post a comment.