இராமநாதபுரம், செப்.18 – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆ. சந்தனதாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் இரா.ஜீவா, மாவட்ட அமைப்பு செயலாளர், மு.சதாம் ராஜா முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் பா.பாலமுருகன் வரவேற்றார். மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் முகையதீன் பேசினார். இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கிய ராமநாதபுரம்- கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வராவிடில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பசுமை தாயக மாநில துணைச் செயலாளர் கா.கர்ணன் மகாராஜன், மாவட்ட துணை செயலாளர் தொண்டி இ.ராசிக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கோ. லட்சுமணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ஆ.துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் சே. ஸ்டாலின், மாணவர் சங்கத் தலைவர் வெ.சந்தோஷ், மாணவர் சங்க அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் இ.சரிப்(ராமநாதபுரம்), ரா.வெங்கடேசன்(மண்டபம்) ந. மக்தும் கான் (திருப்புல்லாணி) , கீழக்கரை நகர் செயலாளர் கு.லோக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அ.இப்ராஹிம் நன்றி கூறினார்


You must be logged in to post a comment.