இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் பாமக கொடி ஏற்று விழா நடந்தது. திருவாடானை ஒன்றிய பாமக செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி தலைவர் ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர். கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிளை செயலாளர் கலைச்செல்வன், மூர்த்தி, துணை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் தீபேஷ் கண்ணன், பிரசன்னா, வில்லாயுதம், அய்யப்பன், பாண்டி, நாகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

You must be logged in to post a comment.