பழனியில் பாமக (வடக்கு) மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் பழனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை தாங்கினார். தொழிற்சங்க செயலாளர் ராஜரத்தினம், அமைப்பு செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். பின்பு நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சியினர் திரளாக கலந்துகொள்வது, அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது, உழவர் பேரியக்க மாநாடு பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவது என்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் தொகுதி செயலாளர்கள் அர்ஜூன் (ஒட்டன்சத்திரம்), கணேஷ் (வேடசந்தூர்), பழனி தொகுதி தலைவர் முத்துச்சாமி உள்ளட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.