ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டார்; அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..

பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அது சமயம் ராமதாஸ் கூறியதாவது;

எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது.

உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது.அன்புமணி எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நான் ஜெயிப்பேன். ராமதாசை தோற்கடிக்க யாராலும் முடியாது. இனி என்னிடம் எதுவுமே இல்லை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டாய். ஆனால் வியர்வை சிந்தி, 46 ஆண்டுகாலம் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று என் மக்களை சந்தித்து பேசி நம் சமூகத்தின் நிலைமையை கூறி வளர்த்த எனது கட்சியை நீ முழுமையாக பறிக்க நினைக்கிறாய்.

அந்த உரிமையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. எனக்கு உதவியாக எனது மூத்த மகள் காந்தி செயல் தலைவராக நியமனம் செய்துள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது உனது தலைவர் பதவி முடிந்து விட்டது.

ஆனால் ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டார். தனியாக நின்று நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம். ஆனால் கூட்டணி வைத்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதற்குக் காரணம் அன்புமணியின் செயல்தான். இனி அதுபோல் நடக்காது. எனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. எனது உழைப்பை இனி யாரும் திருட முடியாது” என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!