திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார். தாமோதரன் பட்டினத்தில் 2 கிளைகள் அமைக்கவும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.6 ல் கட்சி கொடியேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி ஒன்றிய தலைவர் ராகவேந்திரன், கிளை தலைவர் மூர்த்தி, செயலாளர் ஐயப்பன், துணைத் தலைவர் பாரீஸ்வரன், துணை செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொண்டி நகர் செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

தாமோதரன் பட்டினத்தில் பாமக கிளைகள் துவக்க முடிவு..
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிளை பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
You must be logged in to post a comment.