S.P. முரளி ரம்பா தலைமையில் கொடுஞ் செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்று நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகின்றது, அதனை முன்னிட்டு இன்று  (2105/2019) தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா  தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி  எடுக்கப்பட்டது

இன்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேதரத்தினம் பொன் ராமு ஆகியோர் முன்னிலையில் காவல்துறை அரசு அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுத்தனர்

அகிம்சை சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கை உடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான கொடுஞ்செயல்களையும் வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்

எல்லா மக்களிடத்தும் அமைதி சமுதாய ஒற்றுமை நல் உணர்வு ஆகியவற்றை போற்றி வளர்ப்போம், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள், காவல் அதிகாரிகள், உட்பட ஏராளமான காவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!