கீழக்கரை கீர்த்தி மிகு கீழக்கரை ஆனால் இன்று சுகாதாரம் ஒரு கேள்வி குறியாக அந்தக் கீர்த்தியை இழந்து விடும் சூழ்நிலையில் தாழ்ந்து வருகிறது. முன்னொரு காலத்தில் டிசம்பர் மாதம் ஆனால் ஊருக்கு செல்ல ஆர்ப்பரிக்கும் ஊர் மக்கள் இன்று சுகாதாரக் கேட்டை எண்ணி பயந்து கட்டாயத்தின் காரணமாக செல்ல ஆரம்பித்துள்ளார்கள். சமீபத்தில் சந்தித்த 10ல் 6 வெளியூரில் இருந்து ஊருக்கு வந்தவர்கள் ஏதோ ஒரு தொற்று வகையான கிருமி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தவர்களாகத்தான் உள்ளார்கள். வெளிநாட்டில் படித்து தன் சொந்த ஊரில் தன் சொந்த பந்தங்களைக் காண ஆவலோடு வரும் குழந்தைகள் மத்தியிலும் சமீப காலமாக சொந்த ஊருக்கு செல்கிறோம் என்றாலே குதூகலம் மறைந்து முகத்தில் ஒரு பீதி கிளம்பும் நிலமை ஏற்பட்டுள்ளது. ஊரின் நலன் கருதி பல கோடி ரூபாய்களை செலவு செய்து ஊரை முன்னேற்ற பல திட்டங்கள் முன்னெடுத்து வைக்கப்படுகின்றன மறுபுறம் அத்திட்டத்தினால் சுயலாபம் தேடி அலையும் ஒரு கூட்டம். இதற்கு சமீபத்திய நகராட்சி வளர்ச்சி திட்டங்கள் ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட முறையும் பெறப்பட்ட விதங்களுமே சாட்சிகள். கடந்த வருடங்களில் பல கோடிகளுக்கு மேலான திட்ட வளர்ச்சி பணிகள் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது அதில் ஆச்சரியப்படும் விதமாக 90 சதவீத பணிகள் மொத்தம் 3 நபர்களுக்கு எந்த வித முறையான தொழில் முறை அனுபவம் இல்லாத அந்த 3 நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சாக்கடை கால்வாய் பணிகள் சாலைப் பணிகள் பேவர் ப்ளாக் பணிகள் இதையெல்லாம் அரசாங்கம் மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கியது ஆனால் தரமில்லாத நபர்களுக்கு பணிகள் கொடுக்கப்பட்டதால் இன்று இருந்த நிலையும் மாறி பல இடங்களில் சாக்கடைக் குழாய்கள் உடைந்தும் நீர் தேக்கங்களும் ஏற்பட்டு சுகாதாரக் கேடுதான் ஏற்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது கீழக்கரையில் வேறு தகுதியான படித்த மக்களே இல்லையா? இவ்வாறான பணிகளை செய்வதற்கு என்ற கேள்வியே எழுந்துள்ளது. இந்த சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு சரியான தரக்கட்டுப்பாடு இல்லாத காரணமே. உதாரணமாக பேவர் ப்ளாக் சாலைகளுக்கு போடப்படும் கற்களுக்கு சர்வதேச அளவில் அதன் ஸ்திரத்தன்மைக்கான பல கட்ட தொழிற்கூட சோதனைகள் நடத்தப்படும் ஆனால் நம் ஊரில் உள்ள ஒப்பந்ததாரரோ தான் பெற்ப்பட்ட ஒப்பந்த தொகையிலேயே எந்த தரக்கட்டுப்பாடும் இல்லாமல் குடிசைத் தொழில் போல் பேவர் ப்ளாக் செய்யும் தொழில் கூடத்தைத் தொடங்கி அங்கிருந்தே அதற்கான பொருட்களை வினியோகம் செய்வது நம் கண் முன்னே நடக்கும் காட்சி ஆனால் ஆய்வு செய்ய வேண்டிய கேள்வி கேட்க வேண்டிய அரசு நிர்வாகமோ வாய் மூடி கை கட்டி நிற்கிறது இந்நிலையில் நாம் எப்படி தரமான வேலையும் அதன் மூலம் மக்களுக்கு சுகாதாரம் கிடைக்கும் என்று நம்ப முடியும் அதற்கு எந்த வகையான உத்திரவாதமும் இல்லை.

இன்று பல நகரங்களில் அரசால் நிறுவப்படும் உடற்பயிற்சி மையங்களும் விளையாட்டு அரங்கங்களும் அமைத்து வருவதை நாம பார்த்து வருகிறோம் ஆனால் கீர்த்தி மிகு கீழ்க்கரைக்கு அந்த வசதிகளைக் கேட்பதற்கும் ஆளில்லை அதை உபயோகிக்கவும் ஆளில்லா சூழ்நிலையே உருவாகியுள்ளது. சமீபத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஒரு விளையாட்டு வீரரும் சமூக ஆர்வலர் ஒருவர் கீழ்க்கரை மக்கள் முறையான பயிற்சிகள் இல்லாமலே கடந்த காலங்களில் மாவட்ட அளவில் கூடைப்பந்து போன்ற போட்டிகளை வென்றுள்ளார்கள். கடந்த காலங்களில் ஹமீதியா பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானமும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த மைதானமும் பூட்டுப் போடப்பட்டு டிசம்பர் மாதம் மட்டுமே திறக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தை வெளியிட்டார். இவ்வளவு பெரிய ஊரில் பொதுவான அரசாங்க விளையாட்டு மைதானமும் முறையான பயிற்சி மையங்களும் இல்லாதது மிகவும் வருந்தக் கூடிய விசயம். கீழக்கரையிலும் அதன் சுற்றியுள்ள பகுதியிலும் புற்றீசல் போல பெருகி வரும் ஆஸ்பத்திரிகளை கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் சுகாதாரமான கீழக்கரையை உருவாக்க வேண்டும் அதற்கு வேண்டிய அடிப்படை பணிகளை தரமான சுயநலமில்லாத மனிதர்கள் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நாம் இன்று மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் மக்களின் அடிப்படை சுகாதாரம். அந்த சுகாதாரத்தை வென்றெடுப்பது மூலம் ஆரோக்கியமான மக்களையும் நோயில்லா நகரையும் உண்டாக்க முடியும். கீழக்கரை மக்கள் கனவு நிறைவேறுமா?? பொறுத்திருந்து பார்ப்போம்….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










குழந்தைகளுக்கும்,சிறார்களுக்கும் கைபேசிகளை விளையாட கொடுக்காமல் இருந்தால் போதும். நாமே அவர்களுக்கு அதை பழக்கப்படுத்தி விடுவதின் பலன் தான் இது. கண்மூடித்தனமான பாசத்தால் பிள்ளைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.படிப்பும் விளையாட்டும் இரு கண்கள் என அவர்கள் உணரும் வண்ணம் அறிவுரை வழங்கப்பட வேண்டியது நம் அனைவரின் கடமை்