உசிலம்பட்டி தேனி ரோட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் 4 வது வார்டில் வசித்து வரும் கார்த்திக் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த நகராட்சி மேலாளர் அழகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் கார்த்திக் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலீதீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கார்த்திக் என்பவருக்கு நகராட்சி அதிகாரிகள் 10000 ரூ அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் அகமது கபீர், சரவணன், தூய்மை இந்திய திட்ட மேற்பார்வையாளர் பாண்டி, துப்பரவு மேற்பார்வையாளர் கணேசன், சங்கர், தனுஷ்கொடி, தூய்மை இந்திய திட்ட பரப்புரை மேற்பார்வையாளர் தங்கப்பாண்டி, சக்திவேல், கிருஷ்ண சாமி ஆகியோர் கலந்து கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!