ப்ளாஸ்டிக் தடைக்கு பின் கீழக்கரையில் கழிவுகள் குறைவு.. க்ரீன் சர்வீஸ் அமைப்பு ஆய்வு ..

ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது.   கீழக்கரையிலும் பிளாஸ்டிக் தடை அமுல் நடைமுறைப்படுத்திய பின், 100 % குறையாவிட்டிலும் நகர்ப்புறம் முழுதும் பரவிக்கிடக்கும் குப்பைகள் பெருமளவு குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது.

கீழக்கரை நகர் 21 வார்டுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து, தனியார் பங்களிப்புடன் நகரை மேன்படுத்தும் நோக்கில் சென்னையை சேர்ந்த, கிரீன் சர்வீஸ் டிரெஸ்ட் அமைப்பு நகர் முழுதும் ஆய்வு மேற்கொண்டது. முதலில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் சென்று சுகாதார ஆய்வாளர் உத்தரவின் பேரில் அலுவலர் திரு. சரவணன் அவர்களிடம், நகரில் தினந்தோறும் சேரும் குப்பைகளின் அளவு, உபயோகிக்கும் வாகனங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நகராட்சியின் குப்பை கிடங்குகளின் விபரம் போன்றவற்றை கேட்டு அறிந்தனர்.

இதுகுறித்து, டிரெஸ்ட் நிர்வாகியான கிருஷ்ண மூர்த்தி என்பவர் கூறியதாவது “எங்களது பணி 10 மாவட்டங்களில் அரசு ஒப்புதழுடனும், 70க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் பங்களிப்புடன் சிறப்பாக செய்து வருகிறோம். இன்று கீழக்கரையில் எங்களது குழு ஆய்வு செய்துள்ளது. இன்று விடுமுறை என்ற போதும் நகராட்சியினர் பெரும் ஒத்துழைப்பு தந்தனர். மற்ற ஊர்களில் அரசும் மக்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்குவதால் சிறப்பாக செய்ய முடிகிறது. ஊரின் நலன் கருதி குப்பைகளை வெளியே வீசாமல் குப்பைகளை சேகரிப்பவரிடம் தரம் பிரித்து கொடுத்து ஒத்துழைப்பை வழங்க வேண்டுகிறோம் ” என்றார்.

சென்னையில் இருந்து ஆய்வுக்கு வந்த குழுவை நகர் முழுதும் துப்புரவு, மேற்பார்வையாளர் திரு. மனோகரன் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மக்கள் டீம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!