தமிழக முதலமைச்சர் 05.06.2018 அன்று சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அறிவித்ததை தொடர்ந்து 25.06.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதில் உணவு பொருட்களை பொட்டலமாக கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் தாள்கள், ப்ளாஸ்டிக் மேஜை விரிப்பு, ப்ளாஸ்டிக் கப்புகள், ப்ளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் கப்புகள், ப்ளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள், ப்ளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், தெர்மா கோல் கப்புகள் மற்றும் தட்டுகள், நீர் நிரப்ப பயன்படுத்தப்படும் பைகள், பொட்டலங்கள் மற்றும் அனைத்து தடிமன் கொண்ட ப்ளாஸ்டிக் தூக்குப்பைகள், ப்ளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர்பைகள் மற்றும் நெய்யாத ப்ளாஸ்டிக்கால் ஆன எடுத்து செல்லும் பைகள் மற்றும் ப்ளாஸ்டிக் கொடிகள் முதலியவற்றை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், எடுத்து செல்லுதல் பயன்படுத்துதல் மற்றும் விற்பணை செய்தல் ஆகியவற்றிக்கு 01.01.2019 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆணையின் மூலம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அவற்றிக்கு மாற்றாக பயன்படுத்த கூடிய பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்களிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டங்கள், பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல அளவிலான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் 22.12.2018 அன்று காலை 9.00 மணியளவில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. கே.சி. கருப்பணன் அவர்கள் தலைமையில் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. வி.எம். ராஐலெட்சுமி, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளார்கள். மேற்படி கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள், அரசு அதிகாரிகள், கல்வித்துறைää தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் திருமண மண்டபம், உணவு விடுதி உரிமையாளர்கள், வணிகர்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்களிப்பாளர்களும் பங்கேற்று பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்க தங்களது பங்களிப்பை நல்கும் படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தெரிவித்தார்கள்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









