கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கோவில்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்கபபட்டது மேலும்மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அரசு மருத்துமனையில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் மாணவர்கள் 6 நபர் இரத்ததானம் செய்தனர்.

அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் அலமாரிகள் வழங்கப்பட்டு காசநோயாளிகளுக்கு முட்டை, சுண்டல் வழங்கப்பட்டது. இது தவிர மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், வீராச்சாமி, நாராயணசாமி, பாபு, சீனிவாசன், பத்மநாபன், ஜெகநாதன், லட்சுமணபெருமாள், முத்துச் செல்வன் பிரபாகரன், ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, ஆவுடையப்பன், வையாலிமுத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி, அஹமது

படம், சாதிக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!