கீழக்கரையில் நெகிழி (ப்ளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (08/02/2019) கீழக்கரை ரோட்டரி சங்கம், செய்யது ஹமீதா அறிவியல் மற்றும் கலை கல்லூர், ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்தார். இந்த பேரணியானது கீழக்கரை காவல்நிலையத்திலிருந்து – கடற்கரை வரை மாணவ,மாணவிகள் கையில் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதில் இயற்க்கையை சீரழிக்கும் நெகிழியை ஒழிப்போம் என வாசகங்கள் பதிக்கப்பட்டிருந்தது.

” மீன்கள் முதல் மான்கள் வரை மாண்டுபோகும் ஈக்கள் முதல் பூக்கள் வரை மலடாகும்… அத்தனை நதிகளும் நெகிழியால் வற்றிவிடும்… பாலீத்தீன் பைகளால் கால்நடைகள் தினம் தினம் தின்று மடிகிறது… பெண் சிசு கொலை போல் மண் சிசு கொலை பாலீத்தீன் பைகளால் உண்டாகிறது .,

என கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இதில் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம்,ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,செயலாளர் ஹசன்,பொருளாளர் முனியசங்கர்,வட்டார மருத்துவ அலுவலர் ராசீக்த்தீன்,ரோட்டரி சேக் உசேன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், ஆய்வாளர் முத்துமீனாட்சி, என்.எஸ்.எஸ் அலுவலர் ஆனந்த், ராஜ மாணிக்கம் மற்றும் செய்யது ஹமிதா அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!