நாம் தமிழர் கட்சியின் சார்பில் பனைவிதை,புங்கைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா…

திண்டுக்கல் மாவட்டம் ,ஆத்தூர் ஒன்றியம் நி. பஞ்சம் பட்டி பிரிவு, மற்றும் செம்பட்டி பகுதிகளில் உள்ள குளங்களின் கரையின் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபொற்றது.

இவ்விழாவில் குளங்களின் ஓரங்களில் நடுவதற்காக ஐந்தாயிரம் பனை விதை, மற்றும் புங்கை விதைகள், கொண்டு வரப்பட்டு, அக்கட்சியின் ஆத்தூர் ஒருங்கிணைப்பாளர் ப.கணேசன், செயலாளர் ர.மரிய குணசேகரன் , தலைவர் து.சுப்பிரமணி, மற்றும் கழக பொறுப்பாளர்களும்,கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் விதை விதைக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெறச்செய்து, நம் நாடு செழிப்புடனும் ,வாழ நாங்கள் உறுதுணையாக இருப்போம். என சபதம் எடுத்துக் கொண்டனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!